ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்துக்கு...!! வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழ் அளிக்கலாம்.. வழிமுறை இதோ!!
இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பொதுவாக ஓய்வூதியம் பெறும் நபர், ஆயுள் சான்றிதழை வழங்க, நிறுவனத்திற்கு முன் நேரடியாக செல்ல வேண்டும்.
இருப்பினும், முதியவர்களின் சிரமத்தை நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது, இது ஓய்வூதியம் வழங்குவதற்கு போதுமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.
எப்படி சமர்ப்பிக்க வேண்டும்…?
ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க, டோர்ஸ்டெப் பேங்கிங் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும். பின்னர் கட்டணத்தை செலுத்த வேண்டும். இறுதியாக உங்கள் கோரிக்கையை அனுப்பவும்.
Read more ; ஜூன் 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!