சூப்பர்...! கணவன், மனைவி இருவரும் மாதம் ரூ.10,000 பெறும் பென்ஷன் திட்டம்...!
மத்திய அரசு பொதுமக்களின் நலனை கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்பது ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். 14 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். அவ்வாறு திட்டத்தில் இணைபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணையலாம். இருவருக்கும் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.5,000 வழங்கப்படும். அதன்படி கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 வழங்கப்படும். 18 வயதில் அடல் பென்ஷன் திட்டத்தில் இணைந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்த வேண்டும். முதலீடு செய்யும் நபர்களின் வயதை பொறுத்து இந்த அளவு அதிகரிக்கிறது. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனிலும், வங்கிகளிலும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேல் ரூ.1,000 ஓய்வூதியம் பெற மாதம் ரூ.42 செலுத்த வேண்டும். ரூ.5,000 பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். இதன் மூலம் கணவன்,மனைவிக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும்.