For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Pension Hike | செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் ஓய்வூதியம் உயர்வு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

04:46 PM Mar 28, 2024 IST | Chella
pension hike   செம குட் நியூஸ்     தமிழ்நாட்டில் ஓய்வூதியம் உயர்வு     உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

தமிழ்நாட்டின் சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு சமூக நலத்துறை பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை ரூபாய் 2,000 என நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதாகவும், ஏப்ரல் 2003-க்கு முன் தங்களின் சேவையை முறைப்படுத்த முடியவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அவர்களுக்கு ஓய்வூதிய விதிகள் மற்றும் பங்களிப்பு சட்டம் ஆகிய இரண்டின் கீழ் ஓய்வூதியம் பறிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒவ்வொரு ஓய்வூதியத்தை திருத்தத்தின் போதும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஓய்வூதித்தை தொடர்ந்து உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More : Senthil Balaji | புதிய மனு..!! செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு..!!

Advertisement