முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாஸ்து தோஷங்களை நீக்கும் மயில் இறகு.. வீட்டின் எந்த திசையில் வைத்தால் நல்லது?

Peacock feather to remove Vastu doshas.. which direction of the house is good?
07:00 AM Oct 17, 2024 IST | Mari Thangam
Advertisement

மயில் இறகுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மயில் இறகு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான ஹிதேந்திர குமார் சர்மா வீட்டில் மயில் தோகை வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறுகிறார். மயில் தோகை வைத்து சில காரியங்களை செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.அவை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

மயில் தோகையில் கருப்பு நூலை கட்டி கைப்பையிலோ, பணப்பையிலோ வைத்துக் கொண்டால், பணம் அதிகம் சேர்வதுடன், நஷ்டம், கடன் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும். ஏதேனும் பணப் பிரச்சனைகள் இருப்பின் வீட்டின் தென்கிழக்கு பகுதியிலோ அல்லது பணம் உள்ள இடத்திலோ மயில் தோகைகளை வைக்க வேண்டும். இது நிதி சிக்கலை தீர்க்கும்.

நாம் வீட்டில் பணம் மற்றும் நகைகள் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைப்பதன் மூலம் அலமாரியில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, செல்வம்  நிலைக்கவும் செய்யும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

வீட்டில் இருக்கும் தோஷங்கள் மட்டுமில்லாமல் கிரஹத்தால் தோஷம் இருப்பவர்கள் கூட இதனை வீட்டில் வைத்து கொள்ளலாம். குறிப்பாக சனி தோஷம் உள்ளவர்கள் மூன்று மயில் இறகு சேர்த்து ஒரு கருப்பு துணி அல்லது நூலில் கட்டி வைத்து விட வேண்டும். பிறகு ஓம் சனீஸ்வர நமஹே என்ற மந்திரத்தை கூறவேண்டும். இந்த மந்திரம் சனிக்கிழமை அன்று இருபத்தியொரு முறை கூறினால் சனி கிரக தோஷம் நிவர்த்தியாகும்.

Read more ; தடுப்பூசிகள் மன இறுக்கத்தை ஏற்படுத்துமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

Tags :
Peacock feather
Advertisement
Next Article