For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களை மனதளவில் பாடாய்படுத்தும் PCOS பிரச்சனை.! அறிகுறிகளும் தீர்வுகளும்.!

05:55 AM Nov 25, 2023 IST | 1newsnationuser4
பெண்களை மனதளவில் பாடாய்படுத்தும் pcos பிரச்சனை   அறிகுறிகளும் தீர்வுகளும்
Advertisement

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது PCOS. இது ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அதன் சுருக்குமே pcos ஆகும். இது இனப்பெருக்க காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒருவித ஹார்மோன் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கான சுழற்சியில் இருக்காது. காரணமில்லாமல் ஏற்படும் பயம், எப்போதும் சோர்வாக இருப்பது, எண்ண ஓட்டம் சமநிலையில்லாமல் இருப்பது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.

Advertisement

இந்த பிசிஓஎஸ் பிரச்சனை ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பினால் உருவாகிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்க வேண்டும். அந்த ஹார்மோன் குறைவாக சுரந்து ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் பிசிஓஎஸ் பிரச்சனை உருவாகிறது. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முகப்பரு, முகத்தில் முடி வளர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், கருத்தரிப்பதில் பிரச்சனை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

கர்ப்பப்பையின் வெளிப்புற சுவர்களில் ஏற்படும் நீர்க்கட்டிகள் இந்த ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையும் இருக்கும். முதிர்ச்சி அடையாத முட்டைகளைக் கொண்ட நீர்க்கட்டிகளும் கர்ப்பப்பையில் தோன்றும். இந்நோய் பெண்களை மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கிறது.

ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டறிந்து குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. இதனால் மருத்துவரை அணுகி இதற்கு தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயின் தீவிர ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம். மேலும் முறையான உணவுப் பழக்க வழக்கங்கள் நல்ல ஓய்வு மற்றும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலமும் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

Tags :
Advertisement