For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PBKS vs CSK: வந்தவுடன் திரும்பிய தோனி… சிறப்பாக ஆடிய ஜடேஜா… 28 ரன்களில் பஞ்சாப்பை வீழ்த்திய சிஎஸ்கே..!

05:48 AM May 06, 2024 IST | Baskar
pbks vs csk  வந்தவுடன் திரும்பிய தோனி… சிறப்பாக ஆடிய ஜடேஜா… 28 ரன்களில் பஞ்சாப்பை வீழ்த்திய சிஎஸ்கே
Advertisement

PBKS vs CSK IPL 2024: தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 28 ரன்களில் வெற்றி பெற்றது.

Advertisement

இமாச்சலப்பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்-யை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 43 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 32 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 30 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அர்ஷ்தீப் 2 மற்றும் சாம் கரண் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டியது.

பிர்ப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 2-வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளை அந்த ஓவரில் வீழ்த்தினார். பேர்ஸ்டோ மற்றும் ரூசோ என இருவரையும் போல்ட் ஆக்கினார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப் கிங்ஸ். 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த ஷஷாங் சிங்கை 8-வது ஓவரில் வீழ்த்தினார் மிட்செல் சான்ட்னர். அடுத்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங்கை வீழ்த்தினார் ஜடேஜா. அவர் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆனார். அவரை சிமர்ஜித் சிங் வீழ்த்தினார். தொடர்ந்து 13-வது ஓவரில் சாம் கரண் மற்றும் அஷூதோஷ் சர்மா ஆகியோரை வெளியேற்றினார் ஜடேஜா. ஹர்ஷல் படேல் விக்கெட்டை சிமர்ஜித் சிங் வீழ்த்தினார். 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப் கிங்ஸ். ராகுல் சஹர் 16 ரன்களில் போல்ட் ஆனார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. இதன் மூலம் 28 ரன்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Read More:“உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி” – தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட முஸ்தபிசுர் ரஹ்மான்!!

Tags :
Advertisement