"போச்சா.." '500'கோடி நிதி இழப்பை சந்திக்கும் 'PAYTM'..!! ரிசர்வ் பேங்க் நடவடிக்கையை தொடர்ந்து வெளியான அதிர்ச்சி தகவல்.!
வருகிறது பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு PAYTM பேமென்ட் உடைய சர்வீஸ்களை முற்றிலுமாக நிறுத்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் பேடிஎம் நிறுவனத்திற்கு 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி 29க்கு பிறகு வாடிக்கையாளர் கணக்குகள் ப்ரீபெய்டு கருவிகள், பணப்பைகள், ஃபாஸ்ட்டேக்குகள், புதிய டெபாசிட்டுகள் மற்றும் பல வகையிலும் பண பரிவர்த்தனைகளை செய்வதற்கும், டாப்அப்புகளை ஏற்பதற்கும் பேடிஎம் நிறுவனத்தை மத்திய வாங்கி தடை செய்துள்ளது.
இருப்புத் தொகையைப் பயன்படுத்துவதற்கோ, திரும்ப பெறுவதற்கோ வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் நிதி பரிமாற்றங்களும் யுபிஐ சேவைகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்9 கம்யூனிகேசன் லிமிடெட் மற்றும் பேடிஎம் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கணக்குகள் வருகிறது பிப்ரவரி 29க்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பில் உள்ள அனைத்து பைப்லைன் அல்லது நோடல் கணக்குகளின் தீர்வு மார்ச் 15க்குள் முடிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் வருகிற எந்த பரிவர்த்தனைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், FASTags, தேசிய பொது மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறுதல் அல்லது பரிமாற்றங்கள் (AEPS, IMPS, BBPOU மற்றும் UPI வசதிகள் போன்ற சேவைகளை பயன்படுத்த பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு வங்கியால் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
பேடிஎம் பேமென்ட் வங்கி மீது ரிசர்வ் பேங்க் எடுத்த இந்த நடவடிக்கையால் பேடிஎம் நிறுவனத்திற்கு 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.