For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'PAYTM' வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.! யுபிஐ சேவைகளுக்கு 'AXIS' வங்கியுடன் விண்ணப்பம்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

12:55 PM Feb 21, 2024 IST | 1newsnationuser4
 paytm  வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்   யுபிஐ சேவைகளுக்கு  axis  வங்கியுடன் விண்ணப்பம்   வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement

மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தடை விதித்திருந்தது. இந்நிலையில் பேடிஎம் (PAYTM) நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி இணைந்து, யுபிஐ கட்டணங்களை அனுமதிப்பது தொடர்பாக மூன்றாம் தரப்பு விண்ணப்ப செயலி உரிமத்திற்காக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் கூட்டு விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Advertisement

முன்னதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட், அதன் தலைமை நிறுவனமான One97 நிறுவனத்திற்கு கட்டண சேவை வழங்குனராக செயல்பட்டது. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் ஒரு வங்கியாக இருந்ததால் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு Paytm நிறுவனம் மற்றொரு வங்கியுடன் கூட்டாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆக்சிஸ் (AXIS) வங்கியுடன் பார்ட்னர்ஷிப்பின் மூலம் பேடிஎம் நிறுவனம் கூகுள் பே, அமேசான் பே மற்றும் போன் பே போன்று மூன்றாம் தரப்பு பார்ட்னர்ஷிப் மாடலின் கீழ் யுபிஐ சேவைகளை பயனர்களுக்கு வழங்க முடியும். பேடிஎம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை சஸ்பெண்ட் செய்ய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழங்கி உள்ள காலக்கெடு நெருங்கி வருவதால், Paytm ஆப்ஸைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இடையூறுகளும் அல்லது சிரமங்களும் இல்லை என்பதை உறுதிசெய்ய, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செயல்முறைகளை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, One97 கம்யூனிகேஷன்ஸ் அதன் நோடல் கணக்கை, பேடிஎம் பேமெண்ட் வங்கியில் இருந்து ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியதாக அது ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் கூறியுள்ளது. மத்திய வங்கி நிர்ணயித்த மார்ச் 15 காலக்கெடுவிற்குப் பிறகும், Paytm இன் QR குறியீடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் அட்டை இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடரும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்குமுறை தாக்கலை பேடிஎம் நிறுவனம் செய்திருந்தது. மேலும் நோடல் அல்லது எஸ்க்ரோ சேவைகளுக்கு பார்ட்னர்ஷிப்பை சாத்தியப்படுத்துவது தொடர்பாக மற்ற வங்கிகளுடன் ஆலோசித்து வருகிறது.

கடந்த வாரம் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொடர்பான இடைக்கால தடையை பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்கு மாற்றி, புதிய உத்தரவை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பிறப்பித்திருந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதில் இந்த விதர் சிரமமும் இல்லாமல் இருப்பதற்கு ரிசர்வ் பேங்க் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கூடுதலாக, One97 Communications Ltd மற்றும் பேடிஎம் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட் உடனான பேடிஎம் பேமஸ் பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் நோடல் கணக்குகள் பிப்ரவரி 29, 2024 க்குள் நிறுத்தப்பட வேண்டும், நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளை மார்ச் 15, 2024க்குள் முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூறியது.

One97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்து இருந்தது. பிப்ரவரி 19 2024 அன்று இதன் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து 358.35 ரூபாயாக இருந்தது.

English summary: As per reports Paytm bank and axis bank apply for the license of TPAP from NPCI.

Advertisement