ஒரு மாச தவணையை சேர்த்து கட்டுங்க.! லட்சக்கணக்கில் வட்டியை சேமிக்கலாம்.! இஎம்ஐ செலுத்துறவங்க மிஸ் பண்ணாதீங்க.!
இன்றைய உலகில் இஎம்ஐ என்று அழைக்கப்படும் தவணை முறை பணப்பரிவர்த்தனை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றிருக்கும் விலைவாசி மற்றும் பொருளாதார சூழலில் வீடு மற்றும் கார் போன்றவற்றை மொத்தமாக முதல் போட்டு வாங்குவது என்பது நடுத்தர வர்க்க மக்களால் இயலாத ஒன்றாக இருக்கிறது.
இதன் காரணமாக இன்ஸ்டால்மெண்ட் முறையில் வீடு லோன் போன்றவற்றை வாங்குவதன் மூலம் நமது வீடு கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு தவணை முறையில் வாங்கும் போது அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட வருடங்கள் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் போது ஒரு தவணையை அதிகமாக செலுத்தினால் லட்சக்கணக்கில் வட்டிப் பணத்தை சேமிக்கலாம் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு 40 லட்ச ரூபாய் தவணை முறை கடனை 8.5% வட்டியில் 25 வருடங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். இதில் மாத தவணையாக 32,209 செலுத்த வேண்டும். 25 வருடம் முடிவில் நாம் அசலை விட அதிகபட்சமாக 56 லட்ச ரூபாய் வட்டியாக கட்டியிருப்போம். இந்த வட்டி பணத்தை சேமிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் 12 மாதங்கள் இஎம்ஐ செலுத்தும் போது ஒரு இஎம்ஐ தொகையை சேர்த்து ஒரு வருடத்தில் 13 தவணை செலுத்தினால் நமக்கு 14 லட்சம் ரூபாய் மிச்சமாகும். மேலும் 25 வருடங்கள் செலுத்த வேண்டிய தவணையும் 20 வருடங்களாக குறையும்.