முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Patanjali | இதை செய்ய உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது..? பதஞ்சலி நிறுவனத்தை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!

05:14 PM Feb 27, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அலோபதி மருத்துவத்திற்கு எதிரான விளம்பரங்களை வெளியிடுவதாக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Advertisement

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், "நீதிமன்ற உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?" என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

பதஞ்சலி சார்பில் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களையும், டிஜிட்டல் தளத்தில் வெளியான விளம்பரங்களின் லிங்குகளையும் காட்டி, "நாங்கள் இன்று மிகக் கடுமையான உத்தரவை பிறப்பிக்க உள்ளோம். இந்த விளம்பரங்களை பாருங்கள். கடந்தமுறை வரும்போது எல்லாவற்றையும் சரி செய்வீர்கள் என்று சொன்னீர்களே? அந்த வாக்குறுதியை எதன் அடிப்படையில் கொடுத்தீர்கள்? அலோபதி மருந்துகளை விட உங்கள் தயாரிப்புகள் சிறந்ததா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Read More : ’Rajya Sabha சீட் தர முடியாது’..!! உறுதியாக நிற்கும் அதிமுக..!! கூட்டணி தாவுகிறதா தேமுதிக..?

இதையடுத்து, பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

English Summary : SC issues contempt notice to Patanjali over 'misleading advertisements'

Advertisement
Next Article