முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஸ்போர்ட் இனி‌ ஈசியாக எடுக்கலாம்...! "மே ஐ ஹெல்ப் யூ” வசதி அறிமுகம்...!

Passport can now be taken easily...! Introduction of “May I Help You” facility
09:25 AM Jul 11, 2024 IST | Vignesh
Advertisement

பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதில் மக்களுக்கு உதவுவதற்காக சென்னை அண்ணாசாலை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் “மே ஐ ஹெல்ப் யூ” வசதி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொதுமக்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களை அதில் பெறுவதுடன், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புவது, பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அலுவலத்திற்கு நேரில் வர வேண்டிய நேரம் ஆகியவை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். 044 – 2851 3639/ 2851 3640 ஆகிய தொலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். தங்களது கேள்விகளை வாட்ஸ்-அப் செயலியில் 917305330666 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைகள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும். பாஸ்போர்ட் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் அவற்றை விண்ணப்பத்தாரர்கள் தாங்களாகவே நிரப்பலாம் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் கூறியுள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.passportindia.gov.in ஆகும்.

மேலும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பிஎஸ்பி பிரிவின் ‘mPassport Seva’ என்ற அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த ஆவணங்களையோ அல்லது ரகசியமான தகவல்களையோ இடைத்தரகர்கள், முகவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர்களிடம் தெரிவிக்கப்படும் தகவல்கள் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த “மே ஐ ஹெல்ப் யூ” முன்முயற்சி மூலம் மக்கள் தங்களது அடிப்படை கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி பதில் பெறலாம் என அவர் கூறியுள்ளார். முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பொறியில் சிக்காமல் தடுக்க இது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
central govtOnline passportpassport
Advertisement
Next Article