அதிர்ச்சி.. கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது..! 72 பேரின் நிலை என்ன..? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
கஜகஸ்தானின் அக்டாவ் பகுதிக்கு அருகே 72 பேரை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவை நோக்கி பயணித்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது, இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 மீட்புப் பணியாளர்களும், 11 உபகரணங்களும் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்வதாக கஜகஸ்தானின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.. இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் தரையில் விழுந்து தீப்பந்தமாக வெடிப்பதற்கு முன்பு குறைந்த உயரத்தில் பறந்தது. தரையிரங்குவதற்கு சில வினாடிகள் முன்பு வெடித்து சிதறிய காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.