’2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேடி வரணும்’..!! ’வேலையை ஆரம்பீங்க’..!! எடப்பாடி தடாலடி..!!
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் அதிமுகவை தேடி வரும் வகையில் களப்பணி ஆற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த 10ஆம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். 4-வது நாளாக இன்று (சனிக்கிழமை) சிதம்பரம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகள், “சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மற்ற 4 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் இத்தொகுதியில் 4.5 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். அதிமுக வாக்குகளை நாங்கள் பெற்றுக்கொடுத்து விட்டோம். கூட்டணி பலமாக அமையாததால் அதன் வாக்குகள் தான் கிடைக்கவில்லை. 2026 மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ”மற்ற 4 தொகுதிகளிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் அதிமுகவை தேடி வரும் வகையில் கட்சியினர் களப்பணி ஆற்ற வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
Read More : அதிர்ச்சி..!! அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!!