முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடாளுமன்ற தேர்தல்..!! 40/40 தொகுதிகளையும் தன்வசமாக்கும் திமுக..!! மற்ற கட்சிகள்..? கருத்துக் கணிப்பு முடிவுகள்..!!

07:52 AM Dec 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால், பாஜகவின் வெற்றிக்கு தடை போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ‛இந்தியா' கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.

Advertisement

‛இந்தியா' கூட்டணியினர் தற்போது வரை 3 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில், தான் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தெலுங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மிசோராம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஜொலிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்க சில கட்சிகள் தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‛இந்தியா' கூட்டணி கரைசேருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில் தேசிய அரசியல் என்பது பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி என்ற அடிப்படையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் இணையாத கட்சிகளும் களத்தில் உள்ளன. தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி என்பது உருவாகலாம். அதாவது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற அடிப்படையில் போட்டி என்பது நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், Democracy Times Network சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி உள்ளன. இந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும் என இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த கூட்டணி 46% வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு இடங்களும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 22% ஓட்டுகளையும், பாஜக 8% ஓட்டுகளையும், மற்றவர்கள் 24% ஓட்டுகளையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கணிப்பு எப்போது, எப்படி எத்தனை பேரிடம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Tags :
அதிமுகதமிழ்நாடுதிமுகநாடாளுமன்ற தேர்தல்பாஜக
Advertisement
Next Article