For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நாடாளுமன்ற தேர்தல்’..!! ’இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க’..!! இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

02:05 PM Jan 30, 2024 IST | 1newsnationuser6
 நாடாளுமன்ற தேர்தல்’     ’இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க’     இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்
Advertisement

ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் போலியானது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை மக்களவை தேர்தல் தேதிகள் எதுவும் அறிவிக்கவில்லை என்றும் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் டெல்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து, ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இது உத்தேச தேதி என்றும் உத்தேச தேதியை நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை என்றும் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த செய்தி மீண்டும் பரவி வரும் நிலையில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags :
Advertisement