For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாராளுமன்ற தேர்தல் 2024: காங் - திமுக தொகுதி பங்கீடு..! "காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா.?" என்று கேள்வி.!

02:24 PM Jan 28, 2024 IST | 1newsnationuser7
பாராளுமன்ற தேர்தல் 2024  காங்   திமுக தொகுதி பங்கீடு     காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா    என்று கேள்வி
Advertisement

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வருகின்ற மார்ச் மாதம் 2-வது வாரத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி முதலாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதாக கருதி தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் கலைகட்ட தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடுகள் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி ஆட்டம் கண்டிருக்கிறது. அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ஜனதா தளம் கட்சி தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது.

பீகாரில் ராஷ்டிர ஜனதாதள கட்சி மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிதீஷ் குமார் இன்று ஆளுநர் முன்னிலையில் தனது ஆட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் ஆட்சி அமைக்க இருக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் பஞ்சாப் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தியா கூட்டணி கடும் சிக்கலில் இருக்கிறது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்த 2 கட்சிகளும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி திருநெல்வேலி திருச்சி பாண்டிச்சேரி மயிலாடுதுறை உள்ளிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் திமுக காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதிகள் மட்டுமே வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags :
Advertisement