பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024!. இந்தியாவுக்கான 3 ஆம் நாள் அட்டவணை!. பதக்கம் வெல்லும் முனைப்பில் ஷீத்தல் மற்றும் சரிதா!
Paralympics Day 3: பாரா ஷூட்டிங், பாரா வில்வித்தை, பாரா தடகளம் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய நான்கு விளையாட்டுகளில் 3 ஆம் நாள் ஆறு பதக்கங்கள் கைப்பற்றப்படும். குறிப்பாக பாரா வில்வித்தையில் இந்தியா வலுவான பதக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
பாராலிம்பிக் வில்வித்தை போட்டியின் தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, 703 புள்ளிகளை பெற்றார். இதன்மூலம் பாரா விளையாட்டுகளின் சாதனை மற்றும் உலக சாதனையை அவர் முறியடித்தார். ஆனால், தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் ஒரு புள்ளியில் ஷீத்தல் தேவி உலக சாதனையை தவறவிட்டார். எனினும் ஷீத்தல் தேவி 2ஆவது இடம்பிடித்து நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அவருடன் களமிறங்கிய சரிதா முதல் சுற்றில் விளையாடவுள்ளார்.
அந்தவகையில், இருவரும் இன்று நடைபெறும் நாக் அவுட் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இன்றே பதக்கப் போட்டியில் விளையாடுவார்கள். இருவரும் பாரா வில்வித்தையில் வலுவான பதக்க வாய்ப்பாக கருதப்படுகிறார்கள். இதேபோல், 3ம் நாளான இன்று இரவு 10.38 மணிக்கு நடைபெறும் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F57 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் இடம்பெறவுள்ளார்.
Readmore: பாரா ஒலிம்பிக்!. ஒரே நாளில் 3 பதக்கம்!. தடகளத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார்!