பாரிஸ் ஒலிம்பிக்!. திக்.திக்.!. முதல் ஹாக்கி போட்டியில் த்ரில் வெற்றி!. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!
Hockey: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 26ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று(ஜூலை27) 14 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ரைபிள் இரட்டையர் கலப்புப் பிரிவில் சீனா தங்கம் வென்றது. இறுதிச் சுற்றில் தென்கொரியாவை வீழ்த்தி முதல் தங்கம் பெற்று சீனா சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் 10 மீட்டர் ஏர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை மற்றும் ரமீதா – பபுதா அர்ஜூன் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்றன. தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரரும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும்.
ஆனால் தகுதி சுற்றில் ரமிதா – பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதே போல் இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்து வெளியேறின. சீனா (632.2), தென் கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின. இதில் ஜெர்மனியை தோற்கடித்து கஜகஸ்தான் வெண்கலத்தை வென்றது. அதே போல், சீனா தங்கத்தையும் தென் கொரியா வெள்ளியையும் வென்றது.
இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கியில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
போட்டியின் 24வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் மன்தீப் சிங் கோல் அடிக்க, முதல் பாதி ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டியின் 53வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் நியூசிலாந்து வீரர் சைமன் சைல்டு ஒரு கோல் அடித்தார். போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதில் கோல் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், நியூசிலாந்து வீரர் கையில் பந்து பட, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
Readmore: ஷாக்!. வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி!. 48 பேர் நாடு கடத்தல்!. வெளியுறவு அமைச்சகம்!