பாரிஸ் ஒலிம்பிக்!. ஆதிக்கம் செலுத்தும் ஜப்பான்!. பதக்கப் பட்டியலில் முதலிடம்!. இந்தியா எத்தனையாவது இடம்?
Paris Olympics Medals: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீனாவை வீழ்த்தி ஜப்பான் தங்கம் வென்றது. இதன்மூலம் 6 தங்கப்பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் மற்றும் சீனா, ஆஸ்திரேலிய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை குவிக்கின்றன. விளையாட்டில் உலகில் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் போட்டி நடந்து முடிந்து நான்காவது நாட்கள் போட்டி நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று(திங்கள்) நடைபெற்ற ஆடவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீனாவை வீழ்த்தி ஜப்பான் தங்கம் வென்றது. இதன்மூலம் 6 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது.
5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பிரான்ஸ் 2வது இடத்திலும், 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 3வது இடத்தில் சீனாவும், 5 தங்கம், 4 வெள்ளி என 9 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், தென்கொரியா 5 தங்கம், 3 வெள்ளி, 1 ஒரு வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 5வது இடத்திலும், 3 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் அமெரிக்கா 6வது இடத்திலும், பிரிட்டன் 2 தங்கம், 5 தங்கம், 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 7வது இடத்திலும் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான 10 மிமீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனு பாக்கர் வென்ற ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா இதுவரை ஒரேயொரு பதக்கத்துடன் 26 வது இடத்தில் உள்ளது.
Readmore: Breaking…! கேரளாவில் 3 இடங்களில் நிலச்சரிவு… 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்…!