பாரிஸ் ஒலிம்பிக்!. அடுத்தடுத்து பின்னடைவை சந்திக்கும் இந்தியா!. பதக்கங்களை வாரி குவிக்கும் சீனா!
Olympic Medals: அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் இந்தியா, பதக்கப்பட்டியலில் 39வது இடத்திற்கு சரிந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், 5 நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஜூலை 31ம் தேதி முடிவில், 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் 8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 4வது இடத்திலும், பிரிட்டன் 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 5வது இடத்திலும், தென்கொரியா 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 6வது இடத்திலும், அமெரிக்கா 5 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 7வது இடத்திலும் உள்ளது.
இந்தியா இதுவரை இரண்டு வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்று இருக்கிறது. அந்தவகையில் தற்போதைய நிலவரப்படி அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் இந்தியா, பதக்கப்பட்டியலில் 39வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா அடுத்து வெள்ளி பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றால் மட்டுமே பதக்கப் பட்டியில் வேகமாக முன்னேற முடியும். துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் மனு பாக்கர் ஒரு வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். அடுத்து 10 மீட்டர் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.
Readmore: அதிர்ச்சி!… சிலிண்டர் விலை உயர்ந்தது!… எவ்வளவு தெரியுமா?