குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கும் பெற்றோர்களே... புற்றுநோய் ஏற்படும் அபாயம்...!
குழந்தைகளுக்கு சுவைக்காக அதிக கொழுப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்பட அபாயம் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக ஒரு நவீன உடல்நலக் கேடாக சித்தரிக்கப்படுகின்றன. உடல் பருமன், இதய நோய், புற்றுநோய் மற்றும் ஆரம்பகால மரணம் போன்றவற்றை ஏற்படுத்த கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் உலகளவில் உண்ணப்படும் உணவில் கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு சுவைக்காக அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்களை உண்டாக்கும் என கூறுகின்றனர். அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு கிரிஸ்ப்ஸ், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் உறைந்த பீஸ்ஸா ஆகியவை அடங்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஸ்நாக்ஸ் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.