பெற்றோர்களே!. நீண்ட நேர செல்போன் பயன்பாடு!. 3-ல் ஒரு குழந்தை குறுகிய பார்வையால் பாதிப்பு!
Myopia: உலகளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கிட்டப்பார்வை பாதிப்பு கோவிட்-19 தொற்றுநோய் அதிகப்படுத்தியுள்ளது என்றும் இது 2050 ஆம் ஆண்டளவில் 740 மில்லியனைத் தாண்டும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறிவரும் நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் போட்டோ எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான வீடியோக்களை ரீல்ஸ் எடுப்பது என மொபைல் போன்களோடு குழந்தைகளுக்கு அப்போதே தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது நிலாவை காட்டுவது, காக்கா கதை சொல்வது என அப்போதைய பெற்றோர் பல்வேறு வழிமுறைகளை வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும், அவர்களை சமாதானப்படுத்துவதற்கும் எங்களுக்கு ஒரு கருவியாக மொபைல் போன்கள் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் பல தாய்மார்கள்.
இந்தநிலையில், 2050 ஆம் ஆண்டளவில் 740 மில்லியனைத் தாண்டும் என்றும் உலகளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கிட்டப்பார்வையின் பரவலை கோவிட்-19 தொற்றுநோய் அதிகப்படுத்தியுள்ளது என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கிட்டப்பார்வையின் பரவலான நிகழ்வு, குறிப்பாக ஆராய்ச்சியாளர்களிடையே, பொது சுகாதாரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் பரவல் அதிகரிப்பு கணிசமாக இருந்தாலும், மயோபியா மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
கிட்டப்பார்வை அல்லது குறுகிய பார்வை என்பது ஒரு நபரால் தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஆகும். இந்த பார்வையை கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம் சரிசெய்யலாம். சீனாவின் சன் யாட்-சென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மாலஜியில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஆறு கண்டங்களிலும் உள்ள 50 நாடுகளைச் சேர்ந்த ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை உள்ளடக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், உலகம் முழுவதும் தொலைநோக்கு பார்வையால் மூன்று குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆசியாவில் அதிக அளவில் குறுகிய பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 85% மற்றும் தென் கொரியாவில் 73% குழந்தைகள் குறுகிய பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சீனா மற்றும் ரஷ்யாவில் 40% க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்தது.
திரையில் அதிக நேரத்தையும், வெளியில் குறைந்த நேரத்தையும் செலவழிக்கும் குழந்தைகளின் பார்வையில் கோவிட் லாக்டவுன்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கிட்டப்பார்வை ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது, அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.32% இலிருந்து 35.81% ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கிய பிறகு இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
Readmore: பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தர சோதனையில் தோல்வி!. CDSCO அதிர்ச்சி தகவல்!