For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு இந்த ஆவணத்தை வாங்கிவிட்டீர்களா..? சீக்கிரம் எடுங்க..!!

08:43 AM Apr 11, 2024 IST | Chella
பெற்றோர்களே     உங்கள் குழந்தைக்கு இந்த ஆவணத்தை வாங்கிவிட்டீர்களா    சீக்கிரம் எடுங்க
Advertisement

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுக்க வேண்டிய ஆதார் அட்டை குறித்தான முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்ட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது. ஆதாரில் ஒரு தனிப்பட்ட குடியினரின் பெயர், வயது, முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது.

இதேபோல், 2018 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பால் ஆதார் அட்டையை பெறுவார்கள். 5 வயதிற்கு பின்னர் குழந்தைகளின் விவரங்களை பெற்றோர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை எடுப்பதற்கான வழிமுறைகள் :

* பால் ஆதார் கார்டு பெற அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான, UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

* அதில், “My Aadhar” பகுதியில், “Book an appointment” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர், “Child Aadhaar” என்பதைத் தேர்வு செய்து, அதில், “New Aadhar” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை (கேப்ட்சா) உள்ளீடு செய்ய வேண்டும்.

* “Relationship with Head of Family” என்பதன் கீழ், “Child (0-5 years)” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

* அதில், உங்கள் ஆபாயிண்ட்மென்ட் ஐ பதிவு செய்து, அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து, உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Read More : எப்போதும் மகிழ்ச்சி, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் ரகசியம் இதுதான்..!!

’நீங்க பண்ற பெரிய தப்பே இதுதான்’..!! பெண்களிடையே புற்றுநோய் அதிகரிக்க இந்த வாழ்க்கை முறைதான் காரணம்..!!

Advertisement