School: பெற்றோர்களே!… இந்த வயதில்தான் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க வேண்டும்!… புதிய வயது வரம்பு!
School: நர்சரியில் சேர்வதற்கு ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 4 வயது 6 மாதங்களுக்கு மேலாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 தேசியக் கல்விக் கொள்கையின் படி மத்திய அரசு கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்து வந்தாலும் பலரும் இவற்றின் மாற்றங்களை ஏற்றுக் கண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச கல்வித்துறையானது தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களுக்கு தொடக்க வகுப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. புதிய உத்தரவின்படி நர்சரியில் சேர்வதற்கு ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 4 வயது 6 மாதங்களுக்கு மேலாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கே ஜி முதல் வகுப்பில் குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் ஐந்து வயது ஆறு மாதங்களும், கேஜி 2 ம் வகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து வயது முதல் அதிகபட்சம் ஆறு வயது ஆறு மாதங்கள் வரை இருக்க வேண்டும் என்றும், ஒன்றாம் வகுப்பில் குறைந்தபட்ச வயது ஆறும் அதிகபட்ச வயது ஏழு வயது ஆறு மாதங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படி மட்டுமே இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும், அதற்கு முந்தைய வயதில் பெற்றோர்கள் இனி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயது எட்டுவதற்கு முன்னர் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் பெற்றோர் மற்றும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.