முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! கொசு மருந்தை தவறுதலாக குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!!

08:15 AM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கேரளாவில் கொசு மருந்தை தவறுதலாக குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ரம்ஷீத், அன்ஷிபா தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஜாஸா உட்பட 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ரம்ஷீத் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அன்ஷிபா பராமரிப்பில் குழந்தைகள் இருவரும் வளர்ந்து வந்துள்ளனர். கடந்த 16ஆம் தேதி இவர்களது வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது உறவினர்கள் பலரும் வந்திருந்ததால், குழந்தை ஜாஸாவை யாரும் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை ஜாஸா மயங்கிய நிலையில், கிடந்ததோடு அவருக்கு அருகில், கொசு மருந்து ஒன்றின் பாட்டில் காலியாக இருந்துள்ளது. இதனால் குழந்தை கொசு மருந்தை தவறுதலாக குடித்திருக்கலாம் என தெரியவந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு போதிய சிகிச்சை அளிக்காததால், உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, குழந்தையின் நிலை குறித்த தகவல் அறிந்ததும் தந்தை ரம்ஷீத் உடனடியாக நாடு திரும்பினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ஜாஸா உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ஒன்றரை வயது குழந்தைகேரள மாநிலம்கேரளாகொசு மருந்து
Advertisement
Next Article