முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! உங்கள் குழந்தைகளிடம் பலூனை கொடுக்காதீங்க..!! மூச்சுத்திணறலால் உயிரிழந்த 13 வயது சிறுவன்..!!

There has been an incident where a boy died from suffocation after blowing up a balloon.
11:28 AM Dec 03, 2024 IST | Chella
Advertisement

சமீப காலமாக சிறார்கள் உணவு சாப்பிடும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சில நேரங்களில் விளையாட்டு கூட விபரீதத்தில் முடிகின்றன. அந்த வகையில், தற்போது சிறுவன் ஒருவன் பலூன் ஊதியபோது, அது வெடித்து சிதறி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகா, ஜோகனகொப்பா கிராமத்தில் வசிப்பவர் நாராயண பெல்காம்வகர். இவரின் மகன் நவீன் நாராயணன் (வயது 13). இந்த சிறுவன் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்தபலூனை ஊதி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நீண்ட நேரம் பலூனை ஊதியபோது, அது பெரிதாகி திடீரென வெடித்துள்ளது. அது சிறுவனின் சுவாச பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சிறுவனை, உடனடியாக அவரது பெற்றோர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஃபெஞ்சல் புயல்..!! வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!! எல்லாம் பேச்சு மட்டும் தானா..? திமுக, அதிமுக வளர இதுதான் காரணம்..!!

Tags :
கர்நாடக மாநிலம்சிறுவன்பலூன்பெற்றோர்
Advertisement
Next Article