முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி..!! குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை..!!

04:57 PM May 11, 2024 IST | Chella
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் என்ற பகுதியில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி சாப்பிட விரும்புகின்றனர். இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி ஆகும். ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இதில், 10 வயது அப்பாவி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இவர்கள் அனைவரும் மேகி சாப்பிட்டதாகவும், பிறகு அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹசாரா பகுதியில் உள்ள ராகுல் நகரில் நடந்துள்ளது. மேகி சாப்பிட்ட பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பிறகு அனைவரும் அவசரமாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், சிஎச்சி புரான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். ஆனால், 10 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது.!! மரியாதை செலுத்திய பிரேமலதா..!!

Advertisement
Next Article