For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பெற்றோர்..!! காதல் கணவருடன் பைக்கில் சென்றபோது எமனாக மாறிய துப்பட்டா..!!

Kavya's dupatta falls down as it gets caught in the wheel of the motorcycle they are on. In this, Kavya got a serious injury on the back of her head.
06:14 PM Nov 14, 2024 IST | Chella
மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பெற்றோர்     காதல் கணவருடன் பைக்கில் சென்றபோது எமனாக மாறிய துப்பட்டா
Advertisement

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் தனுஷ் என்பவர், டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர், திண்டுக்கல்லை சேர்ந்த 28 வயதாகும் காவியா என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள், இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். தற்போது காவியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு தனுஷ் தனது மனைவியுடன் சேலத்தில் தங்கி பணியாற்றி வந்தார். திருமணத்திற்கு பிறகு காவியாவின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்துள்ளது. தனது பெற்றோருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் ஒருமுறை கூட காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், தனது வளைகாப்பிற்கு வர வேண்டும் என்று காவ்யா அழைத்துள்ளார்.

அதன்படி, வளைகாப்பிற்கு வருவதாக பெற்றோரும் காவ்யாவிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், சேலத்தில் நேற்று காலையில் காவியாவுக்கு வளைகாப்பு நடத்த தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, காவியாவின் பெற்றோரும் சேலத்திற்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினார்கள். பின்னர் மகளுக்கு போன் செய்து சேலத்திற்கு வந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

காவியாவின் திருமணம் முடிந்த பிறகு அவரது பெற்றோர் முதல் முறையாக சேலம் வந்துள்ளார்கள் என்பதால், தானே பெற்றோரை நேரில் சென்று அழைத்து வர வேண்டும் கணவரிடம் கூறியுள்ளார் காவியா. இரவு நேரமாக இருந்தாலும் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ற காவியாவை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தனுஷ் புறப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் புதிய பஸ் நிலையம் நோக்கி அவர்கள் சென்றனர். அப்போது, சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும் இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து காவியா திடீரென கீழே தவறி விழுந்தார்.

காவியாவின் துப்பட்டா, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியதால் கீழே விழுந்துள்ளார். இதில், காவியாவின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் அவரது இறுதி சடங்கில் பங்கேற்கும் நிலைமை ஆகிவிட்டதை நினைத்து அவர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது.

Read More : ஒரே அறையில் 65 வயது முதியவருடன் 3 பெண்கள்..!! வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த போலீஸ்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement