முடங்கியது மைக்ரோசாப்ட்..!! ஐடி ஊழியர்கள், விமான பயணிகள், தொலை தொடர்பு சேவைகள் பாதிப்பு..!!
உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகள் உலகளாவிய செயலிழப்பை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மென்பொருள் செயலிழந்ததால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை, டெல்லி, மும்பையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதாரம், தொலை தொடர்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் 365, எக்ஸ் பாக்ஸ், அவுட் லுக் உள்ளிட்டவை செயல்படாததால், உலகம் முழுவதும் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பக்கோளாறால் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
Read More : நீங்கள் வேலைக்கு செல்லும்போது இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் இருக்கு..!!