பாராலிம்பிக்!. 7 மாத கர்ப்பிணி! வரலாற்று சாதனை!. வெண்கலம் வென்று பிரிட்டன் வீராங்கனை அசத்தல்!
Paralympics! 7 months pregnant! Historical feat! Britain's bronze medalist is amazing!
06:12 AM Sep 02, 2024 IST | Kokila
Advertisement
Paralympics: நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் பிரிட்டனை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான ஜோடி கிரின்ஹாம் வெண்கலம் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப்படைத்துள்ளார். இதன்மூலம், விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி பெண் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
31 வயதாகும் ஜோடி கிரின்ஹாம் பேசுகையில், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும், ஜூலை மாதம் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் ஏதும் பதக்கம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement