பாராலிம்பிக்!. இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி!. தமிழக வீரர் மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தல்!
Paralympics: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உட்பட, ஷரத் குமார், ஷைலேஷ் குமார் என மூன்று பேர் பங்கேற்றனர். மாரியப்பன் அதிகபட்சம் 1.85 மீ., உயரம் தாண்டி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் இவர் வென்ற மூன்றாவது பதக்கமாக அமைந்தது. முன்னதாக 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி வென்றிருந்தார். ஷரத் குமார் 1.88 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இதேபோல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அஜீத் சிங், சுந்தர் சிங் குர்ஜார், ரின்கு பங்கேற்றனர். இதில் அதிகபட்சம் 65.62 மீ., துாரம் எறிந்த அஜீத் சிங் யாதவ், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். சுந்தர் சிங் (64.96 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 55.45 வினாடி நேரத்தில் ஓடி, முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 55.82 வினாடி நேரத்தில் ஓடிவந்து, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.
அதன்படி, 5ம் நாள் (செப்டம்பர் 3) முடிவில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்றது. புள்ளிப்பட்டியலில் இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுக்கு 19வது இடத்தில் உள்ளது.
Readmore: சச்சினுக்குப் பிறகு இந்த கிரிக்கெட் வீரருக்கு பாரத ரத்னா விருது!. முழு விவரம் தெரியுமா?