For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாராலிம்பிக்!. ஒரேநாளில் 2 தங்கம் உட்பட 2 வெள்ளி!. பதக்கங்களை தட்டித்தூக்கும் இந்தியா!. அதிகபட்சமாக தடகளத்தில் 11 பதக்கங்கள்!.

Paralympics! 2 gold including 2 silver in one day!. India knocking medals!
05:51 AM Sep 05, 2024 IST | Kokila
பாராலிம்பிக்   ஒரேநாளில் 2 தங்கம் உட்பட 2 வெள்ளி   பதக்கங்களை தட்டித்தூக்கும் இந்தியா   அதிகபட்சமாக தடகளத்தில் 11 பதக்கங்கள்
Advertisement

Paralympics: பாராலிம்பிக்கின் 6ம் நாள் முடிவில் 2 தங்கம், 2 வெள்ளிப்பதங்களை வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

பாராலிம்பிக் ஆண்களுக்கான கிளப் எறிதலில் கிளப் த்ரோ எஃப் 51 போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளியை உறுதிசெய்தது, தரம்பிர் ஒரு புதிய சாதனையைப் படைத்தார் மற்றும் பிரணவ் சூர்மா வெள்ளி வென்றார். தரம்பீர் 34.92 மீ தூரம் எறிந்து புதிய ஏரியா சாதனை படைத்தார், அதே நேரத்தில் பிரணவ்வின் சிறந்த எறிதல் 34.59 மீ, அவருக்கு வெள்ளி கிடைத்தது.

பாராலிம்பிக் ஆண்களுக்கான வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், போலந்தின் லுாகாஸ் சிசெக் மோதினர். அபாரமாக ஆடிய ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் பாராலிம்பிக், ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இது, பாராலிம்பிக்கில் இவரது 2வது பதக்கம் ஆனது. ஏற்கனவே டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) வெண்கலம் வென்றிருந்தார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கம் ஆனது.

ஹரியானாவின் அஜித் நகரில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் ஹர்விந்தர் சிங் 33. ஒன்றரை வயதில் டெங்குவால் பாதிக்கப்பட்ட போது செலுத்தப்பட்ட சில ஊசிகளின் பக்கவிளைவுகளால் இவரது இரண்டு கால்களும் செயலிழந்தன. லண்டன் பாராலிம்பிக் (2012) போட்டிக்கு பின் வில்வித்தையில் ஆர்வம் காட்டினார். கடந்த 2017ல் நடந்த உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமான இவர், 7வது இடம் பிடித்தார். ஆசிய பாரா விளையாட்டில் இரண்டு பதக்கம் (2018ல் தங்கம்-தனிநபர், 2022ல் வெண்கலம்-இரட்டையர்) வென்ற ஹர்விந்தர், டோக்கியோவில் வெண்கலம் (தனிநபர்) வென்றார். இதன்மூலம் பாராலிம்பிக் வில்வித்தையில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியரானார். தற்போது தங்கம் வென்று சாதித்தார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் (16.38 மீ.,) குரோஷியாவின் லுாகா பாகோவிச் (16.27 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் வென்றனர். இப்பிரிவில் உலக சாதனை (16.80 மீ.,) படைத்த அமெரிக்காவின் ஜோஷுவா சின்னமோ (15.66 மீ.,) 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான முகமது யாசர் (14.10 மீ.,), ரோகித் குமார் (14.10 மீ.,) முறையே 8, 9வது இடம் பிடித்தனர்.

அந்தவகையில் 6ம் நாள் முடிவில் (செப்.4) 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 19வது இடத்தில் இருந்த இந்தியா, 6 புள்ளிகள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது 5தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், தடகளத்தில் மட்டும் ஒரு தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என அதிகபட்சமாக 11 பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

இதற்கு முன், டோக்கியோ பாராலிம்பிக் (2021) தடகளத்தில் இந்தியாவுக்கு 8 பதக்கம் (ஒரு தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம்) கிடைத்திருந்தது. தவிர பாட்மின்டனில் 5 (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), துப்பாக்கி சுடுதலில் 4 (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்), வில்வித்தையில் 2 பதக்கம் (1 தங்கம், 1 வெண்கலம்) கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: பாராலிம்பிக்!. ஒரேநாளில் 2 தங்கம் உட்பட 2 வெள்ளி!. பதக்கங்களை தட்டித்தூக்கும் இந்தியா!

Tags :
Advertisement