Papua New Guinea | பழங்குடியின மக்களிடையே வெடித்த மோதல்..!! 64 பேர் பலி..!! ராணுவம் குவிப்பு..!!
பப்புவா நியூ கினியா நாட்டில் பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
Papua New Guinea | பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. பழங்குடியின மக்கள் அதிகளவில் இங்கு வசித்து வருகின்றனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோரேசெபியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வபாக் என்ற நகரம் மலைப்பகுதிகள் நிறைந்தது.
இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் இடையே நிலம் தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தான், சிகின் மற்றும் கேகின் என்ற பழங்குடியின மக்கள் இடையே வெடித்த மோதலில் 64 பேர் பலியாகியுள்ளனர். இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோதலை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றூக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
64 killed in fight between two tribes in Papua New Guinea
Read More : https://1newsnation.com/railway-jobs-2024-lots-of-vacancies-today-is-the-last-day-to-apply/