For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்றுநோயை உண்டாக்கும் பானிபூரி..!! தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை..!! உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!!

The Food Commissioner has issued an order to conduct an inspection of all panipuri shops in Tamil Nadu.
03:26 PM Jul 03, 2024 IST | Chella
புற்றுநோயை உண்டாக்கும் பானிபூரி     தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை     உணவு பிரியர்கள் அதிர்ச்சி
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால், உடனடியாக தமிழ்நாட்டிலும் இதே புகார் கிளம்பியது.

பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், பச்சை நிறத்தில் கலர் பவுடர் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் அனைத்து பானி பூரி கடைகளிலும் பானி பூரியின் மசாலா தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த தண்ணீரின் தன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதன்படியே, சென்னையில் இந்த அதிரடி சோதனை ஆரம்பமானது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”சென்னையை பொறுத்தவரை 1,000-க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானி பூரி என்பது ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. பானி பூரி சாப்பிடுவதால் சுறுசுறுப்பு தன்மை உடலில் அதிகரிக்கிறது. ஆனால், கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. வெற்று கையுடன் பானி பூரியை உடைத்து அதில் மசாலாவை வைத்து கஸ்டமர்களுக்கு தருகிறார்கள். இதுதான் சுகாதாரமற்ற முறையாகும்.

அதேபோல, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மசாலா தண்ணீரை, ஒருசிலர் மறுநாளும் பயன்படுத்துகின்றனர். இதுவும் தொற்று நோய் பரவ காரணமாகிறது. அதேபோல, பானிதயாரிக்க "ஆப்பிள் கிரீன்" என்ற டையை (நிறமியை) கலக்குகின்றனர். இது புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம். புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Read More : கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலப்பு..!! தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!

Tags :
Advertisement