பதறிய பிரதமர் மோடி!. அசாம் வெள்ளத்தால் 6 லட்சம் மக்கள் பாதிப்பு!. அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை!.
Flood: அசாமில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலமான அசாமில், கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 லட்சம் பேர் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 40 ஐ தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அப்போது, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தர பிரதேச மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில், மொரதாபாத் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. அங்கு வசிக்கும் மக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக படகுகளின் வாயிலாக வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Readmore: இந்த 2 பேர்தான்!. இலங்கை தொடரில் புதிய பயிற்சியாளர் இருப்பார்!. ஜெய் ஷா அப்டேட்!.