For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாதுகாப்பற்றது சின்னசாமி ஸ்டேடியம்!... CSK ரசிகர்களை துன்புறுத்திய RCB ரசிகர்கள்!... வைரலாகும் வீடியோ!... பதறிய சிஎஸ்கே நிர்வாகம்!

06:45 AM May 20, 2024 IST | Kokila
பாதுகாப்பற்றது சின்னசாமி ஸ்டேடியம்     csk ரசிகர்களை துன்புறுத்திய rcb ரசிகர்கள்     வைரலாகும் வீடியோ     பதறிய சிஎஸ்கே நிர்வாகம்
Advertisement

CSK Fans: ஐபிஎல் பிளே ஆப் சுற்று போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததையடுத்து, மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்சியில் உள்ள ரசிகர்களைத் துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டம் மே 18ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதுஒருபுறம் இருக்க பல வருட கனவுகள் நிறைவேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர்.

அந்தவகையில், போட்டிக்கு பிறகு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே சென்றுகொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகள் துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. பெங்களூரு ரசிகர்களின் இழிவான நடத்தையைக் காட்டும் பல வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இது மட்டுமல்லாமல், ஒரு சில பெண் ரசிகர்கள், RCB ரசிகர்கள் தங்களை எவ்வாறு துன்புறுத்தினார்கள், துஷ்பிரயோகம் செய்தார்கள் மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தினர் என்பதையும் விளக்கினர்.

இந்த வீடியோக்கள் வைரலானதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் நலனுக்காக நம்பிக்கையுடன் சிஎஸ்கே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பெங்களூரில் வந்து எங்களுக்கு ஆதரவளித்த எங்கள் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றுவிட்டீர்கள் என்று நம்புகிறேன்! உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுள்ளவனாக!' என்று ட்வீட் செய்திருந்தது.

இருப்பினும், சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் விளையாட்டைப் பார்க்க எந்தப் பெண்களுக்கும் பெங்களூரு பாதுகாப்பானது அல்ல என்று சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ரசிகர் பட்டாளமான விஸ்டல்போடு ஆர்மி பதிலளித்துள்ளது.

Advertisement