நாடாளுமன்றத்தில் பரபரப்பு!... போலி ஆதார் அட்டை மூலம் அத்துமீறி நுழைந்த 3 பேர் கைது!... CISF அதிகாரிகள் அதிரடி!
Parliament: போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பேரை CISF அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பாதுகாப்பு மற்றும் அடையாளச் சோதனைகளின் போது, நாடாளுமன்ற மாளிகையின் ஃபிளாப் கேட் நுழைவுப் பகுதியில், CISF அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற 3 பேரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் ஆதார் அட்டைகளை மேலும் ஆய்வு செய்ததில் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் பாராளுமன்ற வளாகத்திற்குள் எம்பியின் ஓய்வறையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள டீ வீ ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவர். போலி மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் முழுப் பாதுகாப்பையும் சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ் படைகளுக்குப் பதிலாக சிஐஎஸ்எஃப் பொறுப்பேற்ற சில நாட்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: NEET UG 2024!… கட்-ஆஃப்கள், கருணை மதிப்பெண்கள்!… என்டிஏ விளக்கம்!