முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜய் டிவியுடன் பஞ்சாயத்து..!! வேறு சேனலுக்கு தாவிய வெங்கடேஷ் பட், தாமு..!! அப்படினா CWC..?

06:11 PM Feb 27, 2024 IST | 1newsnationuser6
Advertisement

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு இருந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு சீசன் முடிவடைந்ததுமே ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருவார்கள். அந்த வகையில், இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது. ஆனால் ஐந்தாவது சீசன் இன்னும் தொடங்கப்படவில்லை.

Advertisement

இதனால் இணையத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் அதிரடியாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் தான் இந்த சீசனில் இருந்து வெளியேற போவதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து இன்னொரு வீடியோவும் வெங்கடேஷ் வெளியிட்டு இருந்தார். அதில் தான் மட்டுமல்லாமல் தன்னோடு செஃப் தாமுவும் வரப்போகிறார். எங்களுடைய கூட்டணியை நீங்கள் இன்னும் ஒரு பெரிய நிகழ்ச்சியில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில், இணையத்தில் இவர்கள் இருவரும் சன் டிவியில் புதியதாக தொடங்கப்படும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் பேசவில்லை. ஆனாலும், வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோவிற்கு கீழே அதிகப்படியான கமெண்ட்கள் இவர்கள் சன் டிவியில் புதியதாக தொடங்க இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறி வருகின்றனர். ஆனாலும், என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பொதுவாக இந்த மாதிரி பிரபலங்கள் கருத்து தெரிவிக்கும் போது அது பற்றி இணையவாசிகள் சொல்வது தான் கடைசியில் நடந்திருக்கிறது.

English Summary : Venkatesh Bhatt jumped to another channel, Damu

Read More : S.P.Velumani | ’நான் பாஜகவில் இணைகிறேனா’..? மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு தகவல்..!!

Advertisement
Next Article