For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகை கஸ்தூரிக்கு எதிராக வெடித்த பஞ்சாயத்து..!! காவல்நிலையத்தில் குவியும் புகார்கள்..!!

Kasthuri has clarified that he did not misrepresent the Telugu people in the face of heavy criticism for his comments about Telugu speaking people.
10:52 AM Nov 05, 2024 IST | Chella
நடிகை கஸ்தூரிக்கு எதிராக வெடித்த பஞ்சாயத்து     காவல்நிலையத்தில் குவியும் புகார்கள்
Advertisement

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கருத்துக்கு கடும் கண்டனங்கள் வலுத்த நிலையில், தெலுங்கு மக்களை தான் தவறாக குறிப்பிடவில்லை என்று கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

பிராமணர்கள் பாதுகாப்பு கோரியும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரக் கோரியும், கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

கஸ்தூரியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த கஸ்தூரி, தனது பேச்சை சிலர் திரித்துவிட்டதாகவும், திராவிட அரசியலின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலேயே தான் பேசியதாக தெரிவித்தார். இந்நிலையில், தெலுங்கர்கள் பற்றிய அவதூறு கருத்தை நடிகை கஸ்தூரி திரும்பப் பெறவும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தினார்.

இதேபோல், தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்திய கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக-வின் அமர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். கஸ்தூரியின் கருத்து எல்லைமீறி உள்ளதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டனங்கள் தொடர்ந்து வலுத்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தெலுங்கு மக்கள் தன்னை மருமகளாக, தங்கள் வீட்டு மகளாக ஏற்று கொண்டவர்கள்.

அவர்களை பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை. தெலுங்கு மக்களை தான் இழிவாக பேசியதாக பொய் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்காகவே 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

இந்த சூழலில், தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு கருத்து கூறிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இனவாதத்தை தான் பேசவில்லை என அவர் அழுத்தமாக கூறினாலும், சட்ட நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அல்லிநகர் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அளித்த புகாரில், தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்து, தெலுங்கு மன்னர்கள் உருவப்படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More : HDFC வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!

Tags :
Advertisement