முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர், நடனக் கலைஞர், ஸ்டண்ட்மேன், பாடகர், பாடலாசிரியர், பன்முக திறமை கொண்ட பிரபலம்..! ஷாருக்கானோ, சல்மான் கானோ அல்ல..! யார் அந்த நடிகர்..!

09:59 AM May 13, 2024 IST | shyamala
Advertisement

இந்திய சினிமாவில் பன்முக திறமை கொண்ட பிரபலம் ஷாருக்கானோ, ரன்பீரோ, சல்மான் கானோ அல்லது அமீர்கானோ அல்ல. 60 வருடத் திரை வாழ்க்கை, 6 இந்திய மொழிகளில் 200 படங்கள் எனத் திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முத்திரை பதித்திருப்பவர் கமல்ஹாசன். இவர், தமிழ் சினிமாவில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவராக மட்டுமல்ல, சிறந்த கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனமாடுபவர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார்.

Advertisement

தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் அறிமுகமான இவர், வறுமையின் நிறம் சிவப்பு', 'புன்னகை மன்னன்', 'மரோசரித்ரா'  ராஜ பார்வை' 'சகலகலா வல்லவன்', 'காக்கி சட்டை', புன்னகை மன்னன்', நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியன் 2, கல்கி 2898AD மற்றும் தக் லைஃப் ஆகிய மூன்று பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருவதோடு, இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை அல்லது ஆக்ஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல் தற்போதும் சகலகலா வல்லவனாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஷமாக மாறும் ஷவர்மா!… மரணங்களுக்கு எப்படி தொடர்பு?… பாதுகாப்பானது எது?

Tags :
actor kamal haasanகமல்ஹாசன்
Advertisement
Next Article