Pan - Aadhar: மே 31-ம் தேதிக்குள் இதை செஞ்சிடுங்க... இல்லை என்றால் சிக்கல்...!
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கிய ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பலர் இன்னும் தங்களது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காமல் உள்ளனர்.
பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2024 மே 31-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
எஸ் எம் எஸ் மூலம் எப்படி இணைப்பது…?
உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் SMS மூலம் இணைக்க விரும்பினால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து செய்தியைத் தட்டச்சு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.