முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக கூட்டணியில் பாமக, மநீம..? கடுப்பில் வெளியேறும் காங்கிரஸ், விசிக..!! தொகுதிகளுடன் காத்திருக்கும் அதிமுக..!!

10:15 AM Jan 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement

திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது.

Advertisement

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக, தவாக ஆகியவை இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் 2019 தேர்தல் தொகுதி பங்கீடு பார்முலாவை அப்படியே கடைபிடிக்கலாம் என திமுக தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாம். தேவைப்பட்டால் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டதாம்.

ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்கிற பேச்சுகள் பலமாக அடிபடுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், முதல்வர் முக.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுக்கான தொகுதிகள் குறையும். இதில் காங்கிரஸுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும்.

பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்பது அக்கட்சியின் திட்டவட்டமான நிலைப்பாடு. இதனால் காங்கிரஸும் விசிகவும் அதிமுக கூட்டணியை நோக்கி செல்லக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எத்தனை கட்சிகள் இணைந்தாலும் ஏற்கும் நிலையில், இருக்கிறதாம். காங்கிரஸ், விசிக என திமுக அணியில் இருந்து வெளியேறும் கட்சிகளுக்கு கவுரவமான தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக தயாராக இருக்கிறதாம்.

தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு 10 அல்லது 12 தொகுதிகளையும் விசிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக தயாராக இருக்கிறதாம். இதனாலேயே திண்டுக்கல் உள்ளிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் வந்தால் விட்டுக் கொடுக்கலாம் எனவும் அதிமுக முடிவோடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல விசிகவுக்கு சிதம்பரம் தொகுதியை விட்டுத் தரவும் அதிமுக தயாராக உள்ளதாம். திமுக, அதிமுக இரு அணிகளிலும் இன்னும் சில வாரங்களில் கூட்டணிகள் குறித்த தெளிவு பிறக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Tags :
அதிமுக கூட்டணிகூட்டணி கட்சிதிமுக கூட்டணிநாடாளுமன்ற தேர்தல்பாமகமநீம
Advertisement
Next Article