பனங்கிழங்கை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா.? அவற்றால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன.?
தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் கரும்பும் பனங்கிழங்கும் இன்றியமையாதது. இதில் பனங்கிழங்கு நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பொதுவாக கிழங்கு வகைகள் என்றாலே அவை நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பனங்கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் வழங்கக்கூடிய பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
கிழங்கு வகைகளிலேயே பனங்கிழங்கு குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கிறது. இவை இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. பனங்கிழங்கை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்த பனங்கிழங்கு உடல் எடை குறைப்பிலும் செரிமானத்திலும் முக்கிய பங்கு வைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பனங்கிழங்கை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் பனங்கிழங்கு புரதச்சத்தின் சிறந்த மூலமாகவும் செயல்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய புரதங்கள் நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் தசைய இழப்பு ஏற்படாமல் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான உறுதியையும் தருகிறது. பனங்கிழங்கு இதை ஆரோக்கியத்திற்கு முக்கியமான உணவாகும். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கின்றன. இவை நம் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் எண்ணிக்கை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது . பனங்கிழங்கு அல்லது பனங்கிழங்கு பொடியை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதும் தடுக்கப்படுகிறது.