பழனி முருகன் கோவில் விவகாரம்: "தமிழக அரசின் நிலைப்பாடு என்ன.?.." அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மாற்று மதத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக தீர்ப்பு வெளியிட்ட நீதிபதி ஸ்ரீமதி " மாற்று மதத்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் பகுதியை தாண்டி செல்வதற்கு அனுமதி இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக பதிலளித்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு " பழனி முருகன் கோவில் தொடர்பான வழக்கில் வெளியாகும் இறுதி தீர்ப்பை பொறுத்து தமிழக அரசின் நிலை மற்றும் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிப்போம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.