இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 30 தீவிரவாதிகள்.! சீனா பாகிஸ்தானின் விளையாட்டு முறியடிக்கப்படும்.! ராணுவம் எச்சரிக்கை.!
பாகிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டு இருக்கிறது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு மூன்று பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தனர். இவை தவிர ராணுவ வீரர்களை ஏத்தி சென்ற இரண்டு வாகனங்களின் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
எல்லையில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா லடாக் பகுதியில் பெருமளவு ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் இருக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்திய ராணுவத்தின் இந்த திட்டத்தை முறியடிப்பதற்காக மற்ற பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் மற்றும் சீனா அதிகப்படுத்தி இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இந்த விளையாட்டு முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.