For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Pok | "பாகிஸ்தான் வளையல் அணிவில்லை; அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது.." ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை.!!

04:25 PM May 06, 2024 IST | Mohisha
pok    பாகிஸ்தான் வளையல் அணிவில்லை  அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது    ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
Advertisement

Pok: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கடுமையான பதில் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் வளையல்கள் அணியவில்லை என்றும் அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அணு ஆயுதங்கள் நம் மீது விழும் எனவும் முயற்சி எச்சரித்து இருக்கிறார்.

Advertisement

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பேசிய ராஜ்நாத் சிங் இந்தியாவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை கண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(Pok) உள்ள மக்களும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராஜநாத் சிங் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என தெரிவித்தார்.

இந்தியாவின் சக்தி அதிகரித்து வருவதை உலகமே காண்கிறது. இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து இருக்கிறது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று ஆவலோடு இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என கூறினார்.

இதே கருத்தை வலியுறுத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதற்கு நாடாளுமன்ற தீர்மானம் உள்ளது எனவும் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மக்கள் மனதில் மறக்கடிக்கப்பட்ட நிகழ்வு தற்போது மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதி என குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் இருப்பதாகவும் கூறினார். ஒரு பொறுப்பான குடும்பத் தலைவரை நியமிக்கவில்லை என்றால் ஒரு வீட்டை மற்றவர்கள் அபகரித்துக் கொள்வார்கள். அதுபோன்று நாடு பொறுப்பற்றவர்களிடம் இருந்தால் மற்றவர்கள் உரிமை கொண்டாடி இருக்கிறார்கள் என காங்கிரசை குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய ஃபரூக் அப்துல்லா " பாதுகாப்பு அமைச்சர் கூறிவிட்டால் அதை செய்ய வேண்டியது தான். அவர் கூறியதை தடுப்பதற்கு நாங்கள் யார்.? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் கைகளில் வளையல் மாட்டியிருக்கவில்லை. அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது. துரதிஷ்டவசமாக அவை நம் மீதும் விலலாம் என எச்சரித்திருக்கிறார்.

Read More: America | கோடீஸ்வரனுக்கு 1 டாலர் தானம் வழங்கிய 9 வயது சிறுவன்.!! சுவாரசிய சம்பவம்.!!

Tags :
Advertisement