For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Pakistan: பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான்!… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

09:45 AM Feb 16, 2024 IST | 1newsnationuser3
pakistan  பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான் … அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Advertisement

Pakistan: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

Advertisement

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 தொகுதிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றிருந்தது. இதனால், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சியை அமைக்க இரு கட்சிகளும் முன்வந்துள்ளது. இருப்பினும், இன்னும் முடிவு எட்டப்பட்டு ஆட்சி அமைக்காத நிலை நீடிக்கிறது.

எனினும், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையிலும், ஆட்சியமைக்க முடியாத சூழல் இருக்கிறது. இதனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சி பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஐ ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 101 சட்டமன்ற இடங்களை வென்றாலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியால் மட்டுமே ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும். இதனால், வெற்றி சுயேட்சை வேட்பளர்கள் மற்றொரு கூட்டணியில் இணைய வேண்டும். அப்போது, தான் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும். இந்த சூழலில், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியின் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Pakistan, Imran Khan announced Omar Ayub Khan as the Prime Minister candidate

Read More: Snowstorm: அவசர நிலை பிறபிப்பு!… மைனஸ் 30 டிகிரியை கடந்த வெப்பநிலை!… உறையவைக்கும் பனிப்புயல்!

Tags :
Advertisement