For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தான் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி.? நடந்தது என்ன .?

07:18 PM Feb 10, 2024 IST | 1newsnationuser7
பாகிஸ்தான் தேர்தல்  மீண்டும் ஆட்சி அமைக்கும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி   நடந்தது என்ன
Advertisement

பாகிஸ்தான் நாட்டில் 16வது பொது தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் வாக்கு இன்னும் பணி நடைபெற்று வருகிறது. 266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 253 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் பொது தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிட்டன. இவர்களைத் தவிர்த்து ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் கண்டனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் காணிக்கு எதிராக அடுக்கடுக்காக பல வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை தவிர அவரது பிடிஐ கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்களும் சிறையில் உள்ளனர்.

மேலும் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை காரணம் காட்டி இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த அந்நாட்டு தேர்தலினையும் தடை செய்திருந்தது. எனினும் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் சுயேச்சையாக களம் கண்டனர் . மேலும் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பிடிஐ ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் ஆட்சியை அமைக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தற்போது வரை 253 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரிஃப் கட்சியினர் 71 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவைப்படும் நிலையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலையே அங்கு உருவாகி இருக்கிறது. நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக பிடிஐ கட்சியின் தலைவர் கோஹர் அலி தெரிவித்துள்ளார். மேலும் இன்று இரவு பொருள் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லை என்றால் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement