For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து"… X (Twitter) சமூக வலைதளத்தை அதிரடியாக தடை செய்த பாகிஸ்தான் அரசு.!!

05:19 PM Apr 17, 2024 IST | Mohisha
 உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து … x  twitter  சமூக வலைதளத்தை அதிரடியாக தடை செய்த பாகிஸ்தான் அரசு
Advertisement

Twitter: தவறான பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாக கூறி சமூக வலைதளமான X பயன்பாட்டிற்கு பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் முதன்மையாக இருப்பது X. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட இந்த சமூக வலைதளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதன் பெயரை X என மாற்றினார்.

Advertisement

பாகிஸ்தான் அரசின் சட்ட பூர்வ உத்தரவுகளை பின்பற்ற X வலைதளம் தவறிவிட்டது என்றும் அந்தத் தளத்தை தவறாக பயன்படுத்துவதை நிவர்த்தி செய்ய தவறியது என்று கூறிய பாகிஸ்தான் அரசு X (Twitter) வலைதளத்தை உடனடியாக தடை செய்திருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது என டான் .காம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

X சமூக வலைதளத்தை தடை செய்வது தொடர்பாக பாகிஸ்தான் உன் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " X சமூக வலைதளத்தால் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரைX தளத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது .

பாகிஸ்தானில் ட்விட்டர்/எக்ஸ் மீது தடை விதிக்கும் முடிவு தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துதல், பொது ஒழுங்கைப் பேணுதல் மற்றும் நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காத்தல் ஆகியவற்றின் நலனுக்காக எடுக்கப்பட்டது," பல்வேறு ரகசியங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

Read More: ANNAMALAI | “எத்தனை உயிர்கள் போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது”… தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை சர்ச்சை பேச்சு.!!

Advertisement