For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாக். பழங்குடியின குழுக்கள் மோதல்!. பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு!

Pak. Tribal groups conflict!. The death toll has risen to 133!
05:41 AM Dec 03, 2024 IST | Kokila
பாக்  பழங்குடியின குழுக்கள் மோதல்   பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
Advertisement

Pakistan violence: கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவரில் இருந்து பராசினார் நகருக்கு கடந்த 21ம் தேதி சென்ற ஒரு பயணிகள் வாகனங்களின் மீது, குர்ரம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அலிஸாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தீ வைப்பு, துப்பாக்கிசூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன. இரண்டு பிரிவினருக்கும் இடையே மாகாண அதிகாரிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை அமைதி ஏற்படுத்த முயற்சித்தனர்.

Advertisement

அதில் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இரண்டு பழங்குடி பிரிவை சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. 11 நாள் வன்முறை சம்பவங்களுக்கு பிறகு தற்போது அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது என்று மாகாண முதல்வர் அலி அமீன் கந்தாப்பூர் தெரிவித்தார். அதிகாரிகள் கூறுகையில்,‘‘வன்முறை சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் படுகாயமடைந்துள்ளனர்’’ என்றனர்.

Readmore: மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுத்து விடாதீர்கள்..

Tags :
Advertisement